மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

ஊர்காவற்துறை கடற்கோட்டை

இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் கடலின் மத்தியில் அமைந்து அழகிய தோற்றத்தை வழங்கும் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியமான ஒரு இடம் பெறுகிறது. இக்கோட்டையானது ஊர்காவற்துறை காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டுள்ளது.
இது இன்று ஹம்மன்ஹீல் என்றும் ப+தத்ததம்பி கோட்டை என்றும்  அழைக்கப்படுகிறது.


ஊர்காவற்துறைக்கு மயலவள என்று வழங்கப்படும் பெயர் மயலள என்ற போத்துகேய சொல்லில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இச் சொல் துறைமுகம் அல்லது துறைமுக மேடை என பொருள்படும். கீ என்று உச்சரிக்கப்படும் ஞரயல என்ற ஆங்கில சொல் இதற்கு சமமானது.
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது.





இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது. இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.


பாக்கு நீரினைய+டாக சென்ற பன்னாட்டு கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாண பரவைக் கடலில் நுழையும் வழியை அரண் செய்தது இக் கோட்டை. வடக்கில் கோடிக்கரைக்கோ நாக பட்டணத்துக்கோ போய், அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக் கோட்டை பின்பற்றி தென்கழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரமாக எந்த துறை முகத்திற்கும் போக முடியும் மேற்கு திசையில் தொண்டி, அதிராம் பட்டிணத்திற்கும் தென் கிழக்கிற்கு யாழ்ப்பாணத்திற்கும் போகலாம்.
இக் கோட்டையானது பன்றியின் கால் வடிவத்தில் அமைந்துள்ளது.
ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணி பாதுகாக்கப்பட்ட இக்கோட்டை 1795 இல் பிரிட்டிஸ்@கார் கைப்பற்றிய பிற்பாடு சிறைக்கூடமாகவும், மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது.


கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. இதே வேளை இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாகவும் இக் கோட்டை விளங்கியது.  சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. இங்கு பிரிட்டிஸ் காலத்தில் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக்கோட்டையில் ஆயுள் தண்டைனை கைதிகளே சிறைப்படுத்தப்படுத்தப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாக விளங்கியது.


 உல்லாச பயணிகளை கவரும் இடமாக இது இருந்த போதிலும் இக்  இக் கடற்கோட்டையை தூரத்தில் நின்றே பார்க்க முடியும.@ இக் கோட்டையினன பார்வையிட செல்வோர் முன்னரே பாதுகாப்பு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும். அங்கிருக்கும் படகினை ஒழுங்கு செய்து கடற் கோட்டையினை உல்லாசமாக சுற்றி பார்க்க முடியும்.


இது யாழ் நகரத்தில் இருந்த 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. @இதற்கான பயணவழியாக 780 இலக்க பேருந்தில் இருந்து யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி - மண்கும்பான் - வேலனை - நாரந்தனை புளியங்கூடல் போன்ற இடங்களை தாண்டி ஊர்காவற்துறை சென்றடைய முடியும் இப் பாதையின் ஊடாக செல்லும் போது சாட்டி கடற்கரையின் புதிய அனுபவத்தையும் கண்டு உணர முடியும். குறைந்த நிமிடத்தில் 777 இலக்க பேருந்தில் இருந்து யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி  மண்கும்பான் - அராலி  ஊர்காவற்துறை சென்றடைவதோடு, 782 இலக்க பேருந்தில் இருந்து யாழ்ப்பாணம் - காரைநகர்  கடல் வழி@ப்பாதைய+டாக மிக விரைவாக ஊர்காவற்றுறை சென்றடையாலம். இருந்தும் 777 இலக்க பேருந்தில் பயணிக்கும் போதே 45 நிமிடத்தில் ஊர்காவற்த்துறை கோட்டைக்கு சென்றடையலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமான தோற்றத்தோடு உல்லாச பயணிகளை பார்த்தவுடன் கவரும் ஒரு இடமாக காட்சி அழிக்கின்றது. வரலாற்று பொக்கிசமாக இது விளங்கி நிற்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் என்னதான் நீங்கள் முயற்சி எடுத்தாலும் நீங்கள்  கோட்டைக்குள் பிரவேசிக்க முடியாது. அங்கு பாதுகாப்பு தரப்பினர் அக்கோட்டையில் இருந்து கடற்கண் காணிப்பில் ஈடுபடுகின்றனர்.


ஆக்கம்- பா.கஸ்ரோ.பா



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி