அரங்கு நிறைந்த ரசிகர்கள் முன்னிலையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே சுண்டுக்குளி அணி முதலாவது கோலினைப் போட்டிருந்தது மைதானத்தின் நடுவிலிருந்து கோல் கம்பத்தை நோக்கி அடிக்கப்பட்ட பந்து வேலணை பிரதேச செயலக கோல் காப்பாளரை ஏமாற்றி கோலாக மாறியமை குறிப்பிடத்தக்கது ஆட்ட நேர முடிவில் சுண்டுக்குளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் யாழ் மாவட்ட சம்பியனாகியது எனினும் எவ்வித பயிற்சி முன்னேற்பாடுகளும் இன்றி போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய வேலணை பிரதேச செயலக மகளிர் அணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டது வேலணை பிரதேச செயலக அணியில் வேலணையைச் சேர்ந்த ஒரு வீராங்கனையும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வீராங்கனையும் புங்குடுதீவைச் சேர்ந்த பதின்மூன்று வீரங்கனைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது இடம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக