மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மத்திய தரைக்கடலில் 7 சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் மத்திய தரைக்கடலானது அதிகமான காற்றோட்டம் மற்றும் வலுவான நீரோட்டங்கள் உள்ள பகுதியாகும். இது குறித்து கடல் பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் விளைவுகள் குறித்து தெரிவதில்லை என்பதால் மத்திய தரைக்கடல் பகுதியில் சந்தோஷமாக சுற்றுலா நாட்களை கழிக்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிவிக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் மத்திய தரைக்கடல் பகுதியில் கொடி அமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய தரைக்கடல் பகுதியில் பச்சைக்கொடி நிறுவப்பட்டிருந்தால் பாதுகாப்பானது. ஆரஞ்ச் கொடி நிறுவப்பட்டிருந்தால் ஆபத்தானது என்றும் சிகப்பு கொடி என்றால் தடைசெய்யப்பட்ட பகுதியாகும் என அந்நாட்டு அராசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி