மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

வெறுங்கையில் பாம்பு பிடிக்கும் விசித்திர மனிதன்…

jvpnews_aimpari_senikபாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், அம்பாறையில் வசித்து வருகின்ற ஒருவர் வெற்று கைகளினால் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டுவருகின்றார்.
கெஸ்பேவ பிரதேசத்தைச்சேர்ந்த கயான் சுதீப ராஜபக்ஷ என்ற சிற்ப கலைஞரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை அடுத்து அவரது மனைவிக்கு அம்பாறையில் வேலை கிடைத்துவிட்டது.

அவர் தனது சிற்ப வேலைகளுக்கு மேலதிகமாக பாம்புகளையும் பிடித்து காடுகளில் விட்டுவிடுகின்றார். கடந்த 10 வருடங்களாக இவ்வாறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுவருவதாகவும் இதுவரையும் 90 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து காடுகளில் விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாம்புக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அதனை பிடிக்கும் அவர் பாம்பாட்டிகளிலிடமிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட பாம்புகளை கொள்வனவு செய்து காடுகளில் விட்டுள்ளார்.
பாம்பாட்டிகளிடமிருந்து கொள்வனவு செய்ய ஒரு பாம்புக்கு 4500 ரூபா முதல் 6000 ரூபா வரையிலும் செலவழித்துள்ளார்.
மனிதர்களுக்கு வாழும் சுதந்திரம் இருப்பது போல பாம்புகளுக்கும் வாழும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை யாருமே மீறிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறான புண்ணிய காரியங்களை செய்துவருவதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.jvpnews_aimpari_senik jvpnews_aimpari_senik1 jvpnews_aimpari_senik2 jvpnews_aimpari_senik3 jvpnews_aimpari_senik4 jvpnews_aimpari_senik5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி