மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான்-அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்-அவுஸ்ரேலியா சென்றவர்களா?விபரங்கள் இணைப்பு!

இன்றைய தினம் வியாழன் மாலை தீவகம் மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள-செட்டிகாட்டு நீர்வழங்கும் மையத்திலிருந்து நூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தெற்கு கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அதே போல் வேலணை துறையூரை அண்மித்த கடற்கரைப்பகுதியிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றய தினம் புங்குடுதீவு கடற்கரையிலும் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியதாக  தெரிவிக்கப்பட்டது.

கரையொதுங்கும் இச்சடலங்கள்-கடந்தவாரம் அவஸ்ரேலியாவுக்கு சென்ற போது விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களுடையதாக இருக்கலாம் என்று  பொலிஸ்தரப்பால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி