மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

தீவுகளில் ஒன்றான மண்டைதீவு


மண்டைதீவு (Mandathivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேர் திருவிழா, சூரன் போர் போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் இங்குள்ள கத்தோலிக்கர்களின் வணக்கத்தலமாகும். வருடந்தோறும் ஆனி மாதம் இத் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.


மிக அழகிய கடற்கரைகளும் செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும் கம நிலங்களையும் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மக்களையும் கொண்டிருந்தது. கடும் வெய்யில் மற்றும் வறட்சியான காலநிலை இருந்தாலும், கல்வி செல்வம் நிறைந்த குடிமக்களை கொண்டிருந்தது. மண்டைதீவு மக்கள் ஆசிரியத்தொழிலிலும் குறிப்பிட்ட வியாபாரத்திலும் சிறந்து விளங்கினர். எனினும் பிற்காலத்தில் மக்கள் பல பகுதிகளுக்கும் பரவிச்சென்றபடியால் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.
மண்டைதீவில் 3 பாடசாலைகள் இருக்கின்றன. மண்டைதீவு மகாவித்தியாயலம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய பாடசாலையாகும். மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் கார்த்திகேய வித்தியாசாலையும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.
மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மட்டும் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவதே இதற்கான காரணமாகும்.
மண்டைதீவில் மூலிகைகள் அதிகமான காணப்படுகின்றன. இதனால் முன்னைய காலங்களில் யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இங்கு வந்து தாவரவியல் தொடர்பான ஆராய்சசிகளை மேற்கொள்வதுண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி