மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பிரான்சில் 500 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பாரிஸ் கோபுரம்

பிரான்சில் 500 ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்டுள்ள வரலாற்று பாரிஸ் கோபுரமானது சுற்றுலாப்பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியினால் செயிண்ட் ஜாக்ஸ் டி லா போச்செரி (Saint-Jacques-de-la-Boucherie) கோபுரமானது தாக்கப்பட்டது. இதனால் இந்த கோபுரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பொலிசரால் மூடப்பட்டது.
இந்த கோபுரமானது 62 மீற்றர் உயரமும் மற்றும் 300 படிக்கட்டுகள் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரமானது பாரிஸ் நகரத்தின் நடுவே அமையப்பெற்றது.
இக்கோபுரத்தின் உச்சியில் இருந்து நகரத்தை முழுமையாக காண முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு
நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணச்செல்கின்றனர். மேலும் பார்வையாளர்களின் அனுமதி சீட்டானது 6 யூரோவிற்கு விற்கப்படுகிறது,
ஆனால் இந்த நினைவுச் சின்னமானது செப்டம்பர் 15ம் திகதியுடன் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி