மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

1 வயது குழந்தை மதுவருந்தும் காட்சியால் பரபரப்பு...

1 வயது குழந்தை மதுவருந்தும் காட்சியால் பரபரப்பு...
1 வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
ஹெல்மி அதிகமான மது மற்றும் பியர்களை எடுத்து அருந்துவதும் பின்பு மது அருந்திய இடத்திலிருந்து நிலை தடுமாறுவதும் படமாக்கப்பட்டுள்ளது. பின்பு அக்குழந்தை மதுபான நிலையத்திலுள்ள ஏனைய நபர்களின் உணவுகளை திருடி உண்பது, விளையாடுவது, மேசைமீது மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் இக்காணொளியில் பதிவாகியுள்ளது.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற விபரத்தை கூறும் ‘லாஸ் பால்மாஸ்’ என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலரே இதுவாகும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி