மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

துப்பாக்கியை மிஞ்சிய சிங்கம்-2

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்து வெளிவந்த சிங்கம் 2 திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக மலேசிய மக்கள் இப்படத்திற்கு பிரம்மாண்டமான வரவேற்று அளித்துள்ளனர்
.
ஏற்கெனவே சூர்யாவின் அயன், ஆதவன், சிங்கம் ஆகிய படங்கள் கலெக்சனில் 10 இடத்திற்குள் இருக்கின்றன.
தற்போது துப்பாக்கி பட கலெக்சனை சிங்கம் 2 முந்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் துப்பாக்கி படம் 9.64 கோடியை வசூல் செய்தது. தற்போதைய நிலவரப்படி சிங்கம் 2 படம் 9.98 கோடியை வசூல் செய்துள்ளது.
அதே போன்று தசாவதாரம் படம் 10.45 கோடி வசூல் செய்திருந்தது. சிங்கம் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் தசாவதாரத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஜினி நடித்து எந்திரன் படம் 15.41 கோடியை வசூல் செய்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி