மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

உதவி செய்தவரை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்த கிளி

 உதவி செய்ய வந்த நபரை, கிளி ஒன்று தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் யோர்க்ஸ் பகுதி வீதியில் கிளி ஒன்று வழி தெரியாமல் சுற்றித்திரிந்தது.
இதனைக் கண்டு இரக்கப்பட்ட நபர் ஒருவர், அக்கிளியை பிடித்து உரிய நபரிடம் சேர்க்க முயற்சித்துள்ளார்.
அவர் ஏதும் செய்து விடுவார் என்ற பயத்தில், கிளி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது.
இதனை குறித்த நபர் பொருட்படுத்தாத காரணத்தால், தன் அலகுகளால் குத்தி காயப்படுத்தியுள்ளது.
அப்போதும், அவர் வலியைப் பொறுத்துக் கொண்டு அக்கிளியை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு சென்றும் மருத்துவர்கள், உதவியாளர்களை கிளி காயப்படுத்தியதாகவும், பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் மருத்துவமனை ஊழியர் ஹெய்லி தாம்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உரிமையாளாரைக் கண்டு பிடித்து அக்கிளியை ஒப்படைத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி