மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

ஒரே நேரத்தில் 408 பலூன்கள்: பிரான்ஸ் புதிய உலக சாதனை

பிரான்ஸ் நாட்டில் உள்ள மெட்ஸ் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே பங்கேற்றனர். அவர்களிலும் ஓரிருவர் விபத்தில் சிக்கியதால் இந்த விளையாட்டு விழா களையிழந்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முடிவடைந்த இந்த ஆண்டின் பலூனில் பறக்கும் சாகச விழாவில் ஆயிரத்து 200 வீரர்கள் தங்களின் சாகசத்தை வெளிப்படுத்தினர்.
983 பலூன்கள் வண்ண வண்ணமாக வானில் வலம் வந்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இதில், தரையில் இருந்து ஒரே நேரத்தில் 391 பலூன்கள் வானம் நோக்கி எழுந்த ரம்மியமான காட்சியை சுமார் 3 1/2 லட்சம் மக்கள் நேற்று கண்டு களித்தனர்.

391 பலூன்கள் ஒரே நேரத்தில் எழும்பியதும், 408 பலூன்கள் வானில் தவழ்ந்ததும் புதிய உலக சாதனையாக பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி