மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பிரான்சில் நடைபெற்ற வினோத கார்ட்டூன் கண்காட்சி

பிரான்சில் மக்களை கவரும் விதத்தில் மிகப் பிரமாண்டமாக கார்ட்டூன் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி மூலம் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு அதிகமான நகைச்சுவை தன்மை கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கண்காட்சியில் ஏராளமான கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டன. இதில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கனகோ குனோ(Kanako Kuno) ஒவியர் ஒருவர் மை லிட்டில் பிரான்ஸ்(My Little Paris) என்ற தலைப்பில் பிரான்ஸ் நகரில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் குறித்த 50 வகையான கார்ட்டூன் படங்களை வைத்திருந்தார்.
இந்த கார்ட்டூன் படங்களில் அவரின் நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வரைந்திருந்தார். இவர் வரைந்திருந்த கார்ட்டூன் அனைத்தும் பிரான்ஸ் மக்களை வெகுவாக கவர்ந்தது.
இது குறித்து அவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டு மக்களை சிரிக்க வைப்பதற்காகவே இந்த கார்ட்டூனை வரைந்துள்ளேன். மேலும் நான் பிரான்ஸ் நாட்டை மிகவும் விரும்புகிறேன் என்றும் இங்கு வாழ்வதற்கு ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி