பிரான்ஸ்சில் முட்டையின் விலையை அதிகரிக்கக்கோரி, கோழி பண்ணை உரிமையாளர்கள், தினமும் ஒரு லட்சம் முட்டைகளை உடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு, முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், முட்டை மிக குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
முட்டை விலையை அதிகரிக்கும் படி கோழி பண்ணையாளர்கள், அரசிடம் பலமுறை கோரினர்.
இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பிரான்சின், பிரிட்டானி மாகாணத்தில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து, இங்குள்ள, வரித்துறை அலுவலகத்தின் முன், தினமும் ஒரு லட்சம் முட்டைகளை உடைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு லட்சம் முட்டைகளை லாரியில் கொண்டு வந்து, அப்படியே தெருவில் கொட்டி, அந்த இடத்தை நாறடித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வளரும் நாடுகளுக்கு, இந்த முட்டைகளை இலவசமாக அளிக்கவும், முட்டை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக