யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். பஸ் நிலையத்தில் இன்று காலை பேருந்துக்காக காத்து இருந்த இளம் பெண்ணின் நெஞ்சுப் பகுதியை வருடியதுடன் அப்பெண்ணை முத்தமிடுவதற்கு முயற்சித்துள்ளார். இந்த முதியவரின் செயற்பாட்டால் நிலை குலைந்த இளம் பெண் கூக்குரல் எழுப்பியுள்ளார்.
இதனால் அருகில் நின்ற நின்றவர்கள் முதியவருக்கு அடி உதை கொடுத்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவிப்பதற்கு வெட்கப்பட்டதுடன் அங்கு நின்ற ஆட்டே ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார்.
இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த முதியவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக