
திருவருள் மிகு நாகபூசனியம்மனின் தெய்வீக அருளுடன் அம்பாளை நித்தம் தரிசிக்க வரும் அடியவர்களுக்கெல்லாம் நித்திய அன்னதானத்தினை வழங்கி வருகிறது அமுத சுரபி அன்னதான சபை.
மிகவும் மகத்தான சேவையை வழங்கி வரும் அமுதசுரபி அன்ன தான சபையானது தனது அளப்பரிய சேவையின் பொருட்டு பல பாரட்டுக்களையும்,விருதுகளையும் பெற்ற பெருமையினை கொண்டது.
அம்பாளின் வருடாந்த உயர்திருவிழா எதிர்வரும் 09.06.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் தெற்குப் புற வாசலில் இருந்து அமுத சுரபி அன்னதான சபை வரை அடியவர்களின் பாதங்கைளை கடும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் முகமாக நிழல் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
அமுத சுரபி அன்னதான சபையின் சிறப்பித்துச்சொல்லக்கூடிய இத்தகைய சேவை அம்பாளின் உயர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்பது நிதர்சனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக