பிரித்தானிய இளவரசர் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோருக்கு குழந்தை பிறந்ததை பிரித்தானியா மட்டுமன்றி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் குழந்தை ஜோர்ஜ்ஜிற்காக பரிசு ஒன்றினை வழங்குவதற்காக கடந்த வாரம் பிரித்தானியா சென்றிருந்தார்.
உத்தியோகபூர்வமற்ற முறையில் வழங்கும் எந்தப் பரிசையும் தாங்கள் பெறுவதில்லை என்று அரச குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
எனினும் அந்த மனிதர் கென்னிங்ஸ்டன் பிளேஸிலுள்ள அவர்களது வீடு மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை என்று மாறி மாறி சென்று பரிசை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். இருந்தபோதிலும் அந்தப் பரிசு குழந்தை ஜோர்ஜ்ஜிடம் சென்றடைய முடியாமல் போனது.
குறித்த பரிசானது பிரான்ஸை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாக்கெடுப்பிற்கு மத்தியில் தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக