மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் வரலாறு...!

மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

இலங்கையின் வடபாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் மண்கும்பான் அமைந்துள்ளது.

மண்கும்பான்ற்கு அருகாமையில் வேலணை ,அல்லைபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.


இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மண்கும்பான் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு.

இந்த கிராமத்து மக்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம்,வர்த்தகம் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி