மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

சிறப்புற நடைபெற்ற மண்கும்பான் புனித அந்தோனியார் ஆலய திருநாள் திருப்பலி

மண்கும்பான் புனித அந்தோனியார் ஆலய திருநாள் திருப்பலி இன்று மிக சிறப்புற  இடம்பெற்றது காலை 7.00 மணிக்கு அருட்தந்தை போல் நட்சத்திரம்  தலைமையில் இடம்பெற்றது .தொடர்ந்து அருட்தந்தைபோல் நட்சத்திரம்  தனது மறையுரையில்
புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாற்றையும் புனிதரது வாழ்வின் மகத்துவத்தையும் அவரது முன்மாதிரியினை பின்பற்றவேண்டியதின் அவசியத்தினையும் எடுத்துரைத்தார்.



திருப்பலியின் நிறைவில் புனித அந்தோனியாரின் திருச் சொரூப பவனியில் பல அருட்சகோதர்கள் ,அருட்சகோதரிகள்,பீடப்பணியாளர்கள் சிறுவர் ,இளையோர்கள்,முதியவர்கள் ஆகியோர் இப் பவனியில் கலந்துகொண்டனர் .இத் திருவிழாவுக்கு பல்வேறு இடங்களில்லிருந்தும் மக்கள் வருகை தந்து புனித அந்தோனியாரின் அருள் ஆசியினை பெற்றிருந்தனர். அத்தோடு  இது  புதிய  ஆலயம் கட்டப்பட்டபின் 1 வது  திருவிழாவாகும்.

2013-06-30 07.14.30 2013-06-30 07.31.20 2013-06-30 07.37.17 2013-06-30 07.49.32 2013-06-30 08.21.51 2013-06-30 08.37.12 2013-06-30 08.39.45 2013-06-30 08.42.37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி