மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு - வரலாறுகளில் தீவகம்

யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள தீவுகளில் நடுநிலையமாக விளங் குவது புங்குடுதீவாகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமை யப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்ற மளிக்கின்றது. இந்த வகையில் புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன
.
அதாவது தமிழகத்தில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் முஸ்லிம் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொ டித் தீவு என வழங்கி அது காலப் போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர். இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் புங்குடுதீவிலுள்ள வெளிச்சவீடு பற்றி நோக்குகின்ற போது ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர் என்பது இங்கு நோக்கத்தக்க விடயமாகும்.
பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரி யும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி அல்லது 11 மீற்றர் உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இந்த வகையில் இவ்வெளிச்ச வீட்டின் ஒளிச்சமிக்ஞைபற்றி நோக்குவோமாயின் 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி