மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பானில் பல கோடிரூபாவில் இளைப்பாற்றுமண்டபம்-அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

tholar5 

 

மண்கும்பான் பகுதியில் யாழ் – குறிக்கட்டுவான் பிரதான பாதையை அண்மித்து பொதுமக்கள் இளைப்பாறல் மண்டபமொன்று அமைக்கப்படவுள்ளது.


பொதுமக்கள் உறவு மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சின் மூலம் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இம் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 09-11-2013 சனிக்கிழமை அன்று  இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மண்கும்பான் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குருக்கள் சுதாகரசர்மா அவர்களால் பூஜைவழிபாடுகள் நடாத்தி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சின் செயலாளர் திரு.ஹசேன் ஹேரத், ஆளுநரின் செயலாளர் திரு இளங்கோவன், யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வேலணை பிரதேச  செயலர் திருமதி மஞ்சுளாதேவி சுரேஸ், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் திரு.சின்னையா சிவராசா (போல்) அமைச்சின் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 
tholar2 tholar8 tholar4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி